ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைப்புக்கு பின் நடைபெறும் தேர்தல் என்பதால், யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை காலை கூடவுள்ளது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்பாளரை
முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.