அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாபெரும் வெற்றியாளர்கள்!

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாபெரும் வெற்றியாளர்கள்!
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாபெரும் வெற்றியாளர்கள்!

இந்திய மக்களவை தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்கள் குறித்த தகவலை காணலாம்.

இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரீதம் முண்டே பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான இவர், தன் தந்தையின் மறைவைத் தொடர்ந்து அவர் எம்பி ஆக இருந்த மகாராஷ்டிர மாநிலம் பீட் தொகுதியில் போட்டியிட்டார்.

2014ம் ஆண்டு அக்டோபரில் நடந்த இத்தேர்தலில் பிரீதம் முண்டே தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 

2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அனில் பாசு மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் தொகுதியில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 502 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார். இது வரை பதிவான வெற்றிகளில் இது 2வது பெரிய வெற்றியாக உள்ளது.

இப்பட்டியலில் 3வது இடத்தில் முன்னா‌ள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் உள்ளார். தென்னிந்தியாவிலிருந்து தேர்வான முதல் பிரதமரான நரசிம்மராவ் 1991ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் 5 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு குஜராத் மாநிலம் பரோடா தொகுதியில் சுமார் 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். தற்போது மத்திய அமைச்சராக உள்ள ராம்விலாஸ் பஸ்வான் 1989ம் ஆண்டு பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு சுமார் 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் மாபெரும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com