வைகோவுடன் திமுக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு... தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை?

வைகோவுடன் திமுக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு... தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை?

வைகோவுடன் திமுக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு... தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை?
Published on

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுக நிர்வாகிகள் திடீரென்று சந்தித்து பேசினர்.

திமுக கூட்டணியில் மதிமுக உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக, இரு கட்சி நிர்வாகிகளும் நேற்று அண்ணா அறிவாவலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக நிர்வாகிகள், மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து பேசினர்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில், திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தன்னரசு, தென்காசி எம்.பி. தனுஷ் எம் குமார், விருதுநகர் மாவட்ட திமுக துணைச் செயலர் ராஜா அருள்மொழி ஆகியோர் வைகோவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். வைகோவின் சகோதரி ராஜலட்சுமி அண்மையில் காலமான நிலையில், அதற்கு இரங்கல் தெரிவிக்க வந்ததாக திமுகவினர் தெரிவித்தாலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com