\
சமூக வலைதளங்களில் தேடப்படுகிறார் நாஞ்சில் சம்பத்.

சமூக வலைதளங்களில் தேடப்படுகிறார் நாஞ்சில் சம்பத்.

சமூக வலைதளங்களில் தேடப்படுகிறார் நாஞ்சில் சம்பத்.
Published on

அதிமுகவின் சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில் தென்படாததால், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் குறிவைத்து தேடப்பட்டு வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்த பிறகு டிடிவி தினகரன் அணி தனியாக செயல்பட ஆரம்பித்தது. இந்த அணி தரப்பில் தீவிர ஆதரவாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். எல்லா தொலைக்காட்சிகளிலும் தினகரனை ஆதரித்து பேசி வந்த அவர் திடீரென்று எந்த நிகழ்ச்சிகளிலும் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார். 

தினகரன் அணி எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து கர்நாடக மாநிலம் குடகு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். தீவிரமான மோதல்கள் இருதரப்பினருக்கும் இடையில் வலுத்து வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக நாஞ்சில் சம்பத் கருத்து எதுவும் கூறாமல் மெளனமாக உள்ளார். அவர் எங்கே போனார்? ஏன் அமைதியாக இருக்கிறார் எனப் பல சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. காரசாரமாக நடக்கும் இந்த  விவாதத்திற்கான பதிலை விரைவில் நாஞ்சில் சம்பத் வந்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com