பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு ஏன்? - எல்.முருகன் விளக்கம்

பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு ஏன்? - எல்.முருகன் விளக்கம்
பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு ஏன்? - எல்.முருகன் விளக்கம்

தமிழக அமைச்சரவையில் இடம் கேட்பது குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான எல்.முருகன் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “ஒரு மாநில தலைவர் என்ற முறையில் கட்சியின் தேசிய தலைவரை சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். அதே நேரத்தில், இதில் முக்கியமானது ஒன்றிமில்லை. கட்சியை வழிநடத்துவது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை பாஜக தேசிய தலைவர் வழங்கினார்.


தேசிய நிர்வாகிகள் பட்டியல் இன்னும் முழுமையடைவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கிவிட்டது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகளை உள்கட்சி பூசலாக பார்க்கவில்லை. அதிமுக கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது முறை இல்லை. பிரதமர் மோடியின் பணிகளை பார்த்தும், நம்பிக்கையின் அடிப்படையிலும் பலர் பாஜகவில் இணைகின்றனர். தமிழக தேர்தல் வரும் நேரத்தில் அமைச்சரவையில் இடம் கேட்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com