MERRY CHRISTMAS : சாண்டாவின் சிவப்பு நிற உடைக்கு என்ன காரணம்? கோகோ கோலாவா..?
இதோ தொடங்கிவிட்டது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றாலே கேக், புத்தாடை, வாழ்த்துக்களுடன் நினைவுக்கு வருவது, கிறிஸ்துமஸ் தாத்தா வருவார்... கிறிஸ்துமஸ் நாளன்று இரவு தங்களுக்குப் பரிசுகளை வழங்குவார் என்று குழந்தைகள் நம்பிக்கையுடன் காத்திருப்பர். அவர்களது நினைவில் மட்டும் இல்லை, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே சிவப்பு நிற உடையும், வெள்ளை கலரில் நீண்ட தாடியும், தொப்பையும், தோள்பட்டையில் ஒரு பெரிய பரிசுப் பையுடன் இருப்பார் என்பது நினைவில் இருக்கும். இப்படி நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நினைவில் வைத்துக்கொண்டிருக்கும் பிம்பங்கள் எல்லாம் ஒரு நிறுவனம் தங்களது விளம்பரத்தகிற்க்காக உருவாக்கியது என்பது தெரியுமா?
கிறிஸ்துமஸ் தாத்தா யார் .. அவர் உண்மையிலேயே இருக்கிறாரா? நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நினைவில் வைத்திருப்பது ஒரு நிறுவனம் உருவாக்கியது என்றால் அவரது உண்மை தோற்றம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்..
சிகப்பு நிற உடைக்கு மாறியது ஏன்?
கிறிஸ்துமஸ் தாத்தா என்றழைக்க கூடியவர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்துவர்கள் தங்களது புத்தகங்களிலும், தங்களது குழந்தைகளுக்கு கூறும் கதைகளிலும் வெவ்வேறு பெயர்களால், வெவ்வேறு தோற்றங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.
1823ஆம் ஆண்டு கிளெமென்ட் கிளார்க் மூர் என்ற எழுத்தாளர் எழுதிய 'A Visit from St. Nicholas' என்ற கவிதை நூலில் தான் தற்போது உள்ள சாண்டா கிளாஸை ஒத்துப்போகக்கூடிய வடிவமான "கிறிஸ்துமஸ் அன்று பரிசு தரும் நபர் பனிப்பிரதேசங்களில் மான்களால் இழுக்கப்படும் பனிச்சறுக்கு வண்டியில், ரோம ஆடை அணிந்த தாடி வைத்த மனிதராக 'சாண்டே கிளாஸ்' என்ற பெயருடன்" வருவதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் சாண்டா கிளாஸ் ஒரு உயரமான மெலிந்த மனிதராகவும், பயமுறுத்தும் தோற்றமுடைய எல்ஃப் ஆகவும் மஞ்சள் மற்றும் பச்சை நிற உடை அணிந்த நபராக சித்தரிக்கப்பட்டதாக பல்வேறு தளங்களில் கூறப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு 1862இல் கார்ட்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் ஹார்பர்ஸ் வீக்லிக்காக என்பவர் சாண்டா கிளாஸை வரையும் போது கருஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்தவாறு வரைந்திருக்கிறார்.
ஆனால் நாம் தற்போது காணும் சாண்டா கிளாஸ் உருவம் மற்றும் நிறத்தை உருவாக்கியது கோகோ கோலா நிறுவனம். கோகோ கோலா நிறுவனம் 1920களில் தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் போன்ற பத்திரிகைகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்க்காக தங்கள் விளம்பரங்களில் சாண்டா கிளாஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதில் தான் நாம் தற்போது காணும் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, தொப்பை மற்றும் தாடியுடன் இருக்கும் சாண்டா கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கலைஞர் பிரெட் மிசென் சாண்டா உடன் ஒரு கூட்டம் கோகோ கோலா அருந்துவது போன்று வரையப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து கோகோ கோலா நிறுவனம் தங்களது கிறிஸ்துமஸ் விளம்பரங்களில் சாண்டாவை இப்படியாக காண்பிக்க அதுவே அனைவரது நினைவிலும் நிலைத்திருக்கிறது.
