குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்?: மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்?: மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி
குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்?: மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

இந்தியாவில் நடக்கும் தேர்தலில் பாகிஸ்தானுக்கு என்ன வேலை என்றும், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் எப்படி தலையிட முடியும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், “எனது அன்புக்குரிய பிரதமர் அவர்களே..! நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் மீது ஒரு மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள். நம்முடைய எதிரி நாடு, நம் நாட்டு தேர்தலில் தலையிடுவதாகவும், இங்கு யார் வெற்றி பெற வேண்டும், யார் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவு செய்து திட்டம் தீட்டுவதாகவும் கூறியுள்ளீர்கள். உங்களுடைய குற்றச்சாட்டு உண்மையானால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள இந்த சம்பவத்திற்கு, நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நீங்கள், இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தலாமே? அதை விட்டுவிட்டு ஏன் நாட்டு மக்களிடம் குற்றச்சாட்டு கூறுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகம் சார்ந்த தனது கேள்விகளை #JustAsking என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். பாஜக அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே, ஹிந்துத்வாவும், ஹிந்துஸ்தானும் ஒன்று என்றும், இஸ்லாம் மதத்தை இந்த பூமியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் பயங்கரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும் பேசியதற்கு பிரகாஷ்ராஜ் #JustAsking மூலம் சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com