கீட்டோ டயட்டைப் பற்றி தெரியுமா?

கீட்டோ டயட்டைப் பற்றி தெரியுமா?

கீட்டோ டயட்டைப் பற்றி தெரியுமா?
Published on

நிறையப் பேர் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க, ஹெல்தியாக இருக்க தங்களுக்கு ஏற்ற டயட்டுகளை கடைபிடிப்பார்கள். சிலர் நமக்கு எந்த மாதிரி டயட் ஏற்றது என தேர்வு செய்து பேலியோ டயட், வேகன் டயட், கீட்டோ டயட் என கடைபிடிப்பார்கள். இதில் கீட்டோ டயட் சற்று வித்தியாசமானது.

மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என்றாலே உடலை அதிகரிக்கும் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கீட்டோ டயட் என்பது மாவுச்சத்து, கொழுப்புச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடிய டயட். இது உடலுக்கு பலவிதங்களில் நன்மை அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடல் பலத்தை அதிகரிக்கும். நீரிழிவு, கேன்சர், வலிப்பு போன்ற நோய்களிலிருந்தும் நிவாரணம் கொடுக்கிறது.

இது கார்போஹைட்ரேட் உட்கொள்வதை முழுவதுமாகத் தடுத்து, நல்ல கொழுப்புகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கிறது. இது உடலில் ‘கீட்டோசிஸ்’ என்னும் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த வளர்சிதை மாற்றத்தால் உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக எரிக்கப்படுகிறது. இதனால் கல்லீரலுக்கு கீட்டோன்களைக் கொடுப்பதோடு மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. கீட்டோஜெனிக் டயட்டானது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிக அளவில் குறைக்கிறது.

கீட்டோசிஸ் என்றால் என்ன?

ஒரு நாளில் குறைந்தது 50 கிராம் கார்போஹைட்ரேட் உட்கொண்டால் அது உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்காது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். அதனால் உடலானது கொழுப்பு மற்றும் புரதத்தை எரித்து உடலின் இயக்கத்துக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இதனால் குறுகிய காலகட்டத்திலேயே அதிக அளவில் உடல் எடை குறையும்.

யார் இந்த டயட்டை பின்பற்றலாம்?

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களே பெருமளவில் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இது வலிப்பு நோய்க்குத் தீர்வாக அமையும். இதய நோய், மூளை சம்பந்தப்பட்ட நோய், பருக்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். டைப் 1 நீரிழவு நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் இந்த கீட்டோஜெனிக் டயட்டைப் பின்பற்றலாம். 

வயது, பாலினம் பொறுத்து எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் மாறுபடும். எந்த டயட்டை பின்பற்றுவதற்கு முன்பும் நம் உடலின் தன்மை மற்றும் பிரச்னைகளை மருத்துவரிடம் எடுத்துச்சொல்லி உடலுக்கு ஏற்றபடி உணவின் அளவு தெரிந்து பின்பற்றுவது நல்லது.

உடல் எடை குறையும்

மற்ற டயட் முறைகளை விட இந்த டயட்டில் மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே அதீத மாற்றம் தெரியும். உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கலோரிகளை எனர்ஜியாக மாற்றுகிறது. இதில் அதிக புரதம் மற்றும் அதிக கொழுப்பு எரிக்கப்படுவதால் அதிக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.

சிறிய நீர்க்கட்டிகள் கருமுட்டைகளை சுற்றி உருவாவதால் கருப்பையின் அளவு பெரிதாகிறது. இதற்கு இன்சுலின் அளவு அதிகரிப்பதே காரணம். கீட்டோ டயட் இதற்கு தீர்வாக அமைகிறது. மேலும் சில எளிய உடற்பயிற்சிகள் உதவியாக இருக்கும்.

ஓட்ட வீரர்கள், சைக்கிள் ரேஸ் செல்பவர்கள் பயிற்சியின்போது இந்த டயட்டை மேற்கொண்டால் உடலில் தசைகளின் சக்தியை அதிகரிக்கும். மேலும் கடின உழைப்பின்போது ஆக்ஸிஜனின் தேவையைப் பூர்த்திசெய்கிறது.

தீவிரமான பக்கவிளைவுகள் இல்லையென்றாலும் மலச்சிக்கல், குறைவான ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். சிறுநீரகக் கல், உடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவை அரிதாக ஏற்படும். தலைவலி, உடல் பலவீனம், எரிச்சல், வாய் துர்நாற்றம் மற்றும் சோர்வு போன்றவை சாதாரணமாகக் காணப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com