”அடுத்த சில மணிநேரம் இதுதான் நடக்கும்” - சந்திரயான்3 லேண்டர் குறித்து அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன்

அடுத்ததாக லேண்டர் நிலவில் தரையிறங்கிய பொழுது நிலவில் உள்ள மண் கல் போன்றவை மேல் எழும்பும் நிலவில் காற்று இல்லாததால் அவை மறுபடி கீழே இறங்க நேரம் எடுத்துக்கொள்ளும்.
சந்திரயான்3 நிலவில் தரையிறங்கியது
சந்திரயான்3 நிலவில் தரையிறங்கியதுPT

நிலவில் இறங்கிய சந்திரயான்3 ன் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) அவர்களிடம் பேசியதில்,

”அடுத்த 2 மணி நேரம் விக்ரம் லேண்டர் நிலவில் வேலை ஒன்றும் செய்யாது. அதில் ஒரு சாய்வு அளவை மானி ஒன்று இருக்கிறது. இதன் வேலை விக்ரம் லேண்டர் எவ்வளவு சாய்வு அளவில் உள்ளது என்பதை பூமிக்கு தெரியப்படுத்தும். அதே போல் நிலவில் இறங்கிய பொழுது உள்ள தகவல்களை பூமிக்கு அனுப்பும். ”

”அடுத்ததாக லேண்டர் நிலவில் தரையிறங்கிய பொழுது நிலவில் உள்ள மண் கல் போன்றவை மேல் எழும்பும் நிலவில் காற்று இல்லாததால் அவை மறுபடி கீழே இறங்க நேரம் எடுத்துக்கொள்ளும். சொல்லப்போனால் அங்கு சில மணி நேரம் வரை மணல் மழைப் பொழியும்.”

”ப்ரக்யான் ரோவரை இயக்குவார்கள். 3 மணிநேரம் கழித்து சோலார் பேனர் வெளிவரும் நான்கு மணி நேரம் கழித்து ப்ரக்யான் ரோவர் சார்ஜ் செய்யப்பட்டு புகைப்படம் எடுத்து அனுப்பும்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com