ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன? என்ன சொல்கிறது அரசியல் சாசனம்

ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன? என்ன சொல்கிறது அரசியல் சாசனம்

ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன? என்ன சொல்கிறது அரசியல் சாசனம்
Published on

தமிழகத்தில், இதுவரை இல்லாத வகையில் அரசு அதிகாரிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்தியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது. ஆகையால், அவருக்கான அதிகாரம் என்னவென்றும் கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் சாசனம் 355, 200, 167, 155 ஆகிய பிரிவுகளில் ஆளுநருக்கான அதிகார வரம்பு விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை விருப்பப்படி ஆளுநர் மேற்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. மாநில அரசோ அல்லது சட்டப்பேரவையோ கேட்டுக்கொண்டால் மட்டுமே அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அரசுக்குத் தெரியாமல் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியிருப்பது அதிகார மீறல் என்று தோன்றலாம். ஆனால், மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக்கவும் அவசியம் ஏற்பட்டால் ஆளுநர் குறுக்கிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக, மாநில அரசு கேள்வி எழுப்ப முடியாது என்றும் அரசியல் சாசனம் கூறியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com