பேரணியில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் தொண்டர் - வீடியோ காட்சி

பேரணியில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் தொண்டர் - வீடியோ காட்சி

பேரணியில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் தொண்டர் - வீடியோ காட்சி
Published on

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இருச்சக்கர வாகன பேரணியில் பயங்கர துப்பாக்கியுடன் வலம்வந்த காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும், நான்கு கட்ட வாக்குப் பதிவு மீதமுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் 7 கட்டங்களும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் திரிணாமூல், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின் போது மேற்குவங்கத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில், பிர்பும் மக்களவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருச்சக்கர வாகன பேரணி நடத்தியுள்ளனர். கிராமப்புற பகுதிகளில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. இதில். 200க்கும் மேற்பட்ட திரிணாமூல் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் திரிணாமூலம் தொண்டர் ஒருவர் இருச்சக்கர வாகனம் ஒன்றின் பின்னால் அமர்ந்து கொண்டு கைகளில் பயங்கர துப்பாக்கி ஏந்தியவாறு சென்றுள்ளார். அதை அவரது கட்சியினரே வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த கேமிராவில் துப்பாக்கியுடன் தொண்டர் சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை டைம்ஸ் நவ் பிரத்யேகமான வெளியிட்டுள்ளது. அதில், சட்டத்தின் மீது கொஞ்சமும் பயம் இல்லாமல் துப்பாக்கியுடன் தொண்டர் ஒருவர் வலம் வருவது அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.

பிர்பும் தொகுதியில் திரிணாமூல் சார்பில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரும் தற்போதைய எம்.பியுமான சதப்டி ராய் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் துத்குமார் மண்டல் களம் காண்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com