ஆ.ராசா, கனிமொழியை ஆரத்தழுவி வரவேற்ற ஸ்டாலின்: போட்டோ கேலரி
டெல்லியில் இருந்து சென்னை வந்த ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை, மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்ட ஆ.ராசா, மற்றும் கனிமொழி இன்று சென்னை திரும்பினர். அவர்களை வரவேற்க சென்னை விமான நிலையம் சென்ற ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் கனிமொழியை ஆரத்தழுவி வரவேற்றார். அவர் மட்டுமில்லாமல் துரை முருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதுதவிர, ஏராளமான திமுக தொண்டர்களும் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.