`அய்யோ இதுகளும் சதி பண்ணுதே’ மொமண்ட்: ப்ரோப்போஸ் செய்யப்போய் மோதிரத்தை தொலைத்த காதலன்!

`அய்யோ இதுகளும் சதி பண்ணுதே’ மொமண்ட்: ப்ரோப்போஸ் செய்யப்போய் மோதிரத்தை தொலைத்த காதலன்!

`அய்யோ இதுகளும் சதி பண்ணுதே’ மொமண்ட்: ப்ரோப்போஸ் செய்யப்போய் மோதிரத்தை தொலைத்த காதலன்!

மனதுக்கு பிடித்தமான நபரிடம் காதலை வெளிப்படுத்துவதை விட மிகவும் பதற்றமான, ஷாக் கொடுக்கும், சந்தோஷமான நிகழ்வு வேறெதுவும் இருக்காது. இதனாலேயே ப்ரோப்போஸ் செய்யும் போது எந்த குளறுபடியும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல மெனக்கெடல்களை காதலர்கள் நடத்துவது வழக்கம். இருப்பினும் சமயங்களில் எதிர்பாராத விதமாக ஏதேனும் சம்பவம் நிகழ்வதும் வாடிக்கையாகி போகிறது.

அந்த வகையிலான நிகழ்வுதான் ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் காதலர் தினமான நேற்று (பிப்.,14) நடந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஸே என்ற நபர் தனது நீண்ட நாள் தோழியான சாய் என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக சிட்னியில் உள்ள கூகி கடற்கரையில் மணலில் அசத்தலான ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தார்.

இந்த செட் அப் கடற்கரையில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்ததால் அந்த இடத்தில் இருந்தவர்களெல்லாம் ஒன்று கூடி சாயிடம் எப்படி ஸே ப்ரோப்போஸ் செய்கிறார் என்பதை ஆவலோடு எதிர்நோக்கி பார்த்திருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கண்ட சாய்க்கு பெரும் ஆச்சர்யமே தொற்றியிருக்கிறது. அப்போது சாய் முன் மண்டியிட்ட ஸே ப்ரோப்போஸ் செய்ய அதற்கு சாயும் ஏற்றுக்கொள்ளவே ஆசையாசையாக வாங்கிய வைர மோதிரத்தை காதலிக்கு போட்டும் விடும் போது தவறுதலாக அது கடற்கரை மண்ணில் விழுந்துவிடுகிறது.

View this post on Instagram

A post shared by SAI. (@wasaibi.xo)

இது ஒட்டுமொத்த ஏற்பாட்டையும் குலைக்கும் வகையில் இருக்கவே சில நிமிடங்களுக்கு பதபதைத்து போகவே அங்கிருந்தவர்களின் உதவியோடு ஒரு வழியாக அந்த வைர மோதிரத்தை மீட்டெடுத்து ஒரு வழியாக சாயின் விரலில் போட்டுவிட்டிருக்கிறார் ஸே. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கடற்கரையில் இருந்த பார்வையாளரில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட அது சிட்னி மக்களிடையே பெருமளவில் வைரலாகியிருக்கிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அந்த சாய், “என்னுடைய வருங்கால கணவனிடம் இருந்து ஒரு ப்ரோ டிப்ஸ் கொடுக்கிறேன். லூசாக இருக்கும் மோதிரத்தோடு மணலில் ப்ரோப்போஸ் செய்துவிடாதீர்கள். ஏனெனில் கடைசியில் நியூஸிலோ அல்லது டிக் டாக்கிலோதான் வருவீர்கள்” என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com