திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ஆம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மேலும், சட்டமன்ற பணிகளில் வைரவிழாவையும் அவர் எட்டியுள்ளார். இதை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வரும் கருணாநிதி பொதுநிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. தொண்டர்களையும் அவர் சந்திக்கவில்லை. இதனிடையே, கருணாநிதியை பிறந்த நாளன்று தொண்டர்கள் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்கள் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியிருப்பதாக, ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. http://www.wishthalaivar.com/ என்ற இணையதளத்தில் சென்று வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் தங்களது வாழ்த்தை பதிவு செய்யலாம். கருணாநிதியின் மகனும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைத்தார்.