\
இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம்: சீமான்

இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம்: சீமான்

இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம்: சீமான்
Published on

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கப்போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், தனது தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி, பர்மா காலனி, தல்லா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது, நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் மக்களின் வாங்கும் திறனை உயர்த்தப்போவதாகவும், அரசுப்பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நிலையை உருவாக்கப் போவதாகவும் சீமான் உறுதியளித்தார். இலவசங்களையம் கவர்ச்சித் திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை என்றும் சீமான் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com