“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக்
2014 மக்களவை தேர்தலில் பெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னதாக மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் நானா படேகர் உடன் கலந்து கொண்ட மராத்தி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் நிதின் கட்காரி இதனை பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி அக்டோர் 4 மற்றும் 5 தேதிகளில் ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, “நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால், பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை என்ன ஆயிற்று என்று மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஆனால், தற்போது, சிரித்துவிட்டு கடந்து போகிறோம்” என்று கூறினார்.
நிதின் கட்காரி பேசிய இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவை ராகுல் காந்தியும் பகிர்ந்துள்ளார்.
Courtesy: TheQuint