\
சாத்தான்குளம் வழக்கை நியாயமாக விசாரிக்க பரிந்துரைப்போம் : ஐபிஎஸ் சங்கம்

சாத்தான்குளம் வழக்கை நியாயமாக விசாரிக்க பரிந்துரைப்போம் : ஐபிஎஸ் சங்கம்

சாத்தான்குளம் வழக்கை நியாயமாக விசாரிக்க பரிந்துரைப்போம் : ஐபிஎஸ் சங்கம்
Published on

சாத்தான்குளம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐபிஎஸ் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். தந்தையும், மகனுமான இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே வழக்கு விசாரணையை சிபிஐ தரப்புக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐபிஎஸ் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விரைவாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த, விசாரணை செய்யும் நிறுவனத்திடம் பரிந்துரை செய்வோம் என தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com