\
எம்.எல்.ஏ பதவியே தேவையில்லை: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!

எம்.எல்.ஏ பதவியே தேவையில்லை: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!

எம்.எல்.ஏ பதவியே தேவையில்லை: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!
Published on: 

மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க‌ முடியாத நிலையில், எம்.எல்.ஏ பதவியே தேவையில்லை என டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “இந்த துரோகிகள் நாட்டை ஆள வேண்டுமா?, இவர்களை நம்பி எப்படி மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுக்க முடியும்? எங்களுக்கு இந்த எம்.எல்.ஏ பதவியே தேவையில்லை. இனி வரக்கூடிய காலகட்டத்தில் எங்கள் யாருக்கும் எம்.எல்.ஏ பதவியே தேவையில்லை. இவர்களிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்றுதான் போராடிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதேசமயம், அவர்கள் தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், சென்று பேசுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com