புதுவை வடமாநிலம் அல்ல... மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: நாராயணசாமி ஆவேசம்

புதுவை வடமாநிலம் அல்ல... மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: நாராயணசாமி ஆவேசம்

புதுவை வடமாநிலம் அல்ல... மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: நாராயணசாமி ஆவேசம்
Published on

புதுச்சேரி ஒன்றும் வட மாநிலம் அல்ல என்றும், பாரதிய ஜனதாவின் மிரட்டலைக் கண்டு அஞ்சமாட்டோம் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கலைக்கப்படும் என்ற மிரட்டலைக் கண்டு அஞசப் போவதில்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஒன்றும் வட மாநிலம் அல்ல என்றும், பாரதிய ஜனதாவின் மிரட்டலை எதிர்கொள்ளும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். நியமன உறுப்பினர்கள் மூவருக்கு சட்டப்பேரவையில் இடம் ஒதுக்க முடியாது என்றும் நாராயணசாமி மீண்டும் உறுதிபடக் கூறினார்.

இதற்கிடையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்கள் வழங்கப்பட்டன. அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான மோதல்களுக்கு இடையே, இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து அந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com