டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பரசி டிராக்டர் ஓட்டியவாறு வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரபல கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் அன்றாடம் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவரும் வகையில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை வடக்கு தொகுதி வாக்காளர்களை கவனம் ஈர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பரசி, அண்ணாநகர் பகுதிகளில் விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு விவசாயிகளின் உற்ற தோழனான டிராக்டரை முக்கிய வீதிகளில் ஒட்டிச் சென்று வாக்கு சேகரித்தார்.
ஆணுக்கு பெண் எந்தவகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், எங்களது கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் நான் டிராக்டரை ஒட்டி வாக்கு சேகரித்து வருவதாக வேட்பாளர் அன்பரசி தெரிவித்தார்.