\
"நாங்க நாய்குட்டி மாதிரி..." - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலகல பேச்சு

"நாங்க நாய்குட்டி மாதிரி..." - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலகல பேச்சு

"நாங்க நாய்குட்டி மாதிரி..." - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலகல பேச்சு
Published on

தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள்... நாய்க்குட்டி போல் மக்களை சுற்றி சுற்றி வருபவர்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரத்தின் போது பேசினார்.

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தொகுதிக்கு உட்பட்ட சிலைமலைப்பட்டி, பாப்புரெட்டிபட்டி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் இணைந்து அவரது மூத்த மகள் ப்ரியதர்ஷினியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார், தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள், நாய்க்குட்டி போல் மக்களை சுற்றி சுற்றி வருபவர் நாங்கள் என பேசிய அவர், முதல்வரின் மன உறுதியை சீர் குலைக்க நினைத்தாலும் அவர் மன உறுதியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவார் என பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com