கருணாநிதியை சந்திக்கிறார் மம்தா: அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமா..?

கருணாநிதியை சந்திக்கிறார் மம்தா: அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமா..?

கருணாநிதியை சந்திக்கிறார் மம்தா: அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமா..?
Published on

திமுக தலைவர் கருணாநிதியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். 

இதற்காக ஏப்ரல் 11 ஆம் தேதி மம்தா சென்னை வருகிறார். ஏப்ரல் 11 அல்லது 12 ஆம் தேதிகளில் கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழியை டெல்லியில் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்பொழுது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று மம்தா கூறினார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ள நிலையில், கருணாநிதி உடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்  ராவ் முதலில் அழைப்பு விடுத்தார். அப்பொழுது முதல் நபராக சந்திரசேகர் ராவுக்கு மம்தா ஆதரவு தெரிவித்ததோடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். 

திமுக தற்போது வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கருணாநிதியை மம்தா பானர்ஜி சந்திப்பது எத்தகையை மாற்றங்களை விளைவிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அதேபோல், புதிதாக கட்சி தொடங்கியுள்ள கமல் ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவால், பினராய் விஜயன் ஆகிய தலைவர்களை சந்தித்தார். அதேபோல், கொல்கத்தா சென்ற போது, மம்தா பானர்ஜியையும் சந்தித்தார். அதேபோல், கமல்ஹாசனையும் மம்தா சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com