பெண் ரசிகையின் தலையில் விழுந்த சிக்ஸர் - யார் அந்த பேட்ஸ்மேன்? - வைரல் வீடியோ

பெண் ரசிகையின் தலையில் விழுந்த சிக்ஸர் - யார் அந்த பேட்ஸ்மேன்? - வைரல் வீடியோ
பெண் ரசிகையின் தலையில் விழுந்த சிக்ஸர் - யார் அந்த பேட்ஸ்மேன்? - வைரல் வீடியோ

லக்னோ அணி வீரர் ஆயுஷ் படோனி அடித்த ஒரு சிக்சர் பந்து பெண் ரசிகையின் தலையில் விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். 211 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லீவிஸ் 23 பந்துகளில் 55 ரன்களும், ஆயுஷ் படோனி 9 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியின் 19-வது ஓவரை சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஆயுஷ் படோனி சிக்ஸர் விளாசினார். அந்த பந்து ஸ்டேடியத்தில் இருந்த பெண் ரசிகையின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com