மும்பை: முகக்கவசம் அணியக்கோரிய மாநகராட்சி ஊழியரை கடுமையாக தாக்கிய பெண்-வைரல் வீடியோ

மும்பை: முகக்கவசம் அணியக்கோரிய மாநகராட்சி ஊழியரை கடுமையாக தாக்கிய பெண்-வைரல் வீடியோ

மும்பை: முகக்கவசம் அணியக்கோரிய மாநகராட்சி ஊழியரை கடுமையாக தாக்கிய பெண்-வைரல் வீடியோ
Published on

மும்பையில் ஆட்டோவில் ஏறும் பெண்ணிடம் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய மாநகராட்சி ஊழியரை, அப்பெண் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.   

இந்த சம்பவத்தை பதிவு செய்த மொபைல் வீடியோவில், ஒரு பெண் ஆட்டோரிக்‌ஷாவுக்குள் ஏற முயற்சி செய்கிறார், அப்போது நீல நிற சீருடை அணிந்த மாநகராட்சி ஊழியர், அவரிடம் முகக்கவசம் அணியுமாறு சொல்கிறார்.  உடனே ஆட்டோவில் ஏறிய அந்த பெண் திடீரென்று தொழிலாளியை அறைகிறார். பின்னர், மாநகராட்சி சீருடை அணிந்த அந்த பெண்ணை தொடர்ந்து குத்தி உதைக்கும் சம்பவம் பதிவாகியிருக்கிறது.

இந்த சம்பவம் மும்பையின் கண்டிவாலி சாலையில் நடந்துள்ளது. "என்னைத் தடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என்னைத் தொட எவ்வளவு தைரியம்?" என்று ஆட்டோவில் வந்த பெண் கூச்சலிடுவதுக் கேட்கிறது. "அவரை விடாதீர்கள்" என்று தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பி.எம்.சி ஊழியர் கூடியிருந்த சிலரிடம் கூறுகிறார்.

தொற்றுநோய் பரவல் காரணமாக மும்பையில் முகக்கவசம் அணியாததற்காக 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை இரவு வரை 24 மணி நேர காலகட்டத்தில் 25,833 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. முகக்கவசம் போன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றவில்லை என்றால், மற்றொரு கடுமையான பொதுமுடக்கம் விதிக்கப்படலாம் என்பது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com