கன்னியாகுமரி தொகுதியில் போட்டியா?: விஜய் வசந்த் விளக்கம்
சமீபத்தில் மறைந்த எம்.பி வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த், அரசியலில் ஈடுபட விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் காலமானார். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேசியதாவது “ அப்பாவின் நண்பர்கள் பலரும் நான் அரசிலியில் ஈடுபட வேண்டும் என விரும்புகின்றனர். எனக்கும் அரசியலில் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அப்பாவின் இழப்பு பேரிழப்பு. அவர் விட்டு சென்ற பணிகளில் முதற்கட்டமாக வணிக நிறுவனங்கள் மற்றும் எங்கள் குடும்பத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது. நான் தற்போதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மட்டும் தான்” என்று கூறினார்.
மக்களைவை தொகுதி காலியானதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.