கள்ள ஓட்டு : '49P' சட்டப் பிரிவை பயன்படுத்தி தனது வாக்கை செலுத்திய திருச்சி வாக்காளர்!

கள்ள ஓட்டு : '49P' சட்டப் பிரிவை பயன்படுத்தி தனது வாக்கை செலுத்திய திருச்சி வாக்காளர்!

கள்ள ஓட்டு : '49P' சட்டப் பிரிவை பயன்படுத்தி தனது வாக்கை செலுத்திய திருச்சி வாக்காளர்!
Published on

அபுதாபியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார். 34 வயதான அவர் திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190, வரிசை எண் 990) மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சென்றார். ஆனால் அவரது வாக்கை முன்னதாக யாரோ ஒருவர் கள்ள ஓட்டாக செலுத்திவிட்டு சென்றது தெரியவந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் தனது ஆவணங்களை காண்பித்து தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவை பயன்படுத்தி தனது வாக்கை,  வாக்குச்சீட்டு முறை மூலமாக செலுத்தினார். மேலும் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி இவரது வாக்கை செலுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com