தமிழக இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்
தமிழகத்தில் நடக்கும் இடைதேர்தலில், காலை ஒன்பது மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடார ம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை 9 மணி வரை தமிழக இடைத்தேர்தலில், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் 11 சதவிகிதமும் ஒட்டப்பிடாரத்தில் 14.53 சதவிகித வாக் குப்பதிவும் அவரக்குறிச்சியில் 10.51 சதவிகிதமும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 12.05 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.