தமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு !
தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகப்பட்சமாக ஆரணி தொகுதியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியாக 11 மணி நிலவரம் (வாக்குப்பதிவு சதவீதத்தில்)
திருவள்ளுர்- 31.00
வட சென்னை- 23.36
தென் சென்னை- 23.87
மத்திய சென்னை-22.89
ஸ்ரீபெரும்புதூர்- 26.24
காஞ்சிபுரம்- 29.37
அரக்கோணம்-33.07
கிருஷ்ணகிரி-31.65
தருமபுரி-31.47
திருவண்ணாமலை-32.06
ஆரணி-36.51
விழுப்புரம்-34.83
கள்ளக்குறிச்சி-32.93
சேலம்-31.46
நாமக்கல்-32.94
ஈரோடு-30.72
திருப்பூர்-28.14
நீலகிரி-28.32
கோவை-27.61
பொள்ளாச்சி-29.80
திண்டுக்கல்-28.65
கரூர்-34.55
திருச்சிராப்பள்ளி-31.67
பெரம்பலூர்-32.77
கடலூர்-28.56
சிதம்பரம்-31.79
மயிலாடுதுறை-33.36
நாகப்பட்டினம்-31.20
தஞ்சாவூர்-30.76
சிவகங்கை-30.55
மதுரை-25.41
தேனி-31.17
விருதுநகர்-29.25
ராமநாதபுரம்-29.48
தூத்துக்குடி-28.46
தென்காசி-29.72
திருநெல்வேலி-25.96
கன்னியாகுமரி- 26.31