ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் : பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் வியாக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தபட்டுள்ளனர். இருப்பினும், ஆங்காங்கே தொடர்ந்து பணப்பட்டுவாடா தொடர்ந்து நடைபெறுவதாக ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் குற்றசாட்டி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடயே, ஆர்.கே.நகர்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் பிடித்த தொகை 18 லட்சம் ரூபாய் என்பது குறைவு என்றும், சுமார் 10 கோடி ரூபாய் வரை ஒரே நாளில் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதே போல் ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.