"அப்பாக்கு ஓட்டு போடுங்க"-அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்கு சேகரித்த மகள்

"அப்பாக்கு ஓட்டு போடுங்க"-அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்கு சேகரித்த மகள்

"அப்பாக்கு ஓட்டு போடுங்க"-அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்கு சேகரித்த மகள்
Published on

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மகள் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டி.குன்னத்தூர் பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மூத்த மகள் ப்ரியதர்ஷினி பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசிய அவர், இன்னும் எத்தனை கொரோனோ வந்தாலும் மக்களை காப்பாற்ற என் தந்தை இருக்கிறார். அதிக வாக்குகள் வித்யாசத்தில் எனது தந்தையை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வாக்கு சேகரித்து பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com