\
கலிபோர்னியாவில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை: துளிர்க்கும் நம்பிக்கைக்கு உதவும் உள்ளங்கள்!

கலிபோர்னியாவில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை: துளிர்க்கும் நம்பிக்கைக்கு உதவும் உள்ளங்கள்!

கலிபோர்னியாவில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை: துளிர்க்கும் நம்பிக்கைக்கு உதவும் உள்ளங்கள்!
Published on

கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில், புதிய தலைமுறை துளிர்க்கும் நம்பிக்கை இயக்கம் தொடங்கப்பட்டு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு உறுதுணையாக இருக்கும்வகையில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் என பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவகையில், அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மணிவண்ணன் குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த ஜனிஸ் ஆனந்த் குடும்பத்தினர் ரூ 15 ஆயிரம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதேபோல், திருவள்ளூரைச் சேர்ந்த சுப்ரமணி குடும்பத்தினர் ரூபாய் பத்தாயிரமும், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சங்கரநாராயணன் குடும்பத்தினர் 5 ஆயிரம் ரூபாயும் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவி மூலம் தமிழகத்தில் பல்வேறு ஏழை குடும்பத்தினருக்கு தேவையான அத்தியவாசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கிடைத்திருக்கும் சிறு உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com