துளிர்க்கும் நம்பிக்கை: வறியோரின் துயர் துடைக்கும் கொடை உள்ளங்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: வறியோரின் துயர் துடைக்கும் கொடை உள்ளங்கள்
துளிர்க்கும் நம்பிக்கை: வறியோரின் துயர் துடைக்கும் கொடை உள்ளங்கள்

கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையும் வருவாயும் இழந்து தவிக்கும் வறியோருக்கு 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' வாயிலாக நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றனர்.

கோவையில் முதுகு தண்டுவட பாதிப்பால் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல், வயதான தாயாருடன் வசிக்கும் அழகுமுத்து என்பவர், தனக்கான மருத்துவ சாதனங்களை துளிர்க்கும் நம்பிக்கையிடம் கோரியிருந்தார். அழகுமுத்துவுக்கு உதவிட முன்வந்த திருப்பூரைச் சேர்ந்த இந்திரா சுந்தரம் அறக்கட்டளை இயக்குனர் இந்திராணி, வருடத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நேரில் அளித்தார்.

திருப்பூரில் ரேஷன் அட்டை இல்லாத ஒரு குடும்பம் உள்ளிட்ட 5 குடும்பத்தினருக்கு வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் உதவ முன்வந்தார். ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை 5 குடும்பத்தினருக்கும் அவர் வழங்கினார்.

மதுரையில் செல்லூர், தத்தனேரி, நரசிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்து தவித்த 5 குடும்பத்தினர், புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கையிடம் உதவி கோரினர். அவர்களுக்கு மதுரை பூம் தொண்டு நிறுவனத்தினர் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

புதுக்கோட்டையில் இரு பெண் குழந்தைகளுடன் உணவிற்கு வழியின்றி தவித்த ராதா என்பவருக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முருகையன் என்பவருக்கும் சர்வஜித் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் ராமதாஸ் என்ற மருத்துவர் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புதுக்கோட்டையில் இரு பெண் குழந்தைகளுடன் உணவிற்கே வழியின்றி தவித்த ஒரு பெண்மணியின் குடும்பத்திற்கும்,பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட மற்றொரு தம்பதியரின் குடும்பத்திற்கும் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்வின் மூலமாக கல்வியாளர் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒரு மாதத்திற்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கியதோடு அவர்களின் நிரந்தர வாழ்வதற்கு வழிவகை செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை காமராஜ புரத்தை சேர்ந்தவர் ராதா. இரண்டு பெண் குழந்தைகளோடு வசித்துவரும் இவர் ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால் இவர்களின் குடும்பம் உணவுக்கே வழியின்றி தவித்தது. இந்நிலையில் தங்களுக்கு ஏதேனும் அத்தியாவசிய உதவிகளை செய்ய வேண்டும் என புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை குழுவிற்கு சமதி தொலைபேசி வாயிலாக உதவி கேட்டார்.

அவரின் நிலை குறித்து அறிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்வஜித் மக்கள் சேவை அறக்கட்டளையை சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் உடனடியாக அந்த குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் அரிசி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சுமதியின் வீட்டிற்கே சென்று வழங்கினார். அடுத்த கட்டமாக ராதாவின் குடும்பத்தின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கும் உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த முருகையன் என்பவர் பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டு இந்த ஊரடங்கு காலகட்டத்தில் உணவுக்கு வழி இன்ற தவித்த நிலையில் அவரின் குடும்பத்திற்கும் சர்வஜித் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் அரிசி காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை உடனடி தேவையாக வழங்கி அடுத்த கட்ட வாழ்வாதாரத்திற்கும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர்.

புதுக்கோட்டையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பெரும் துயரத்தால் அத்தியாவசிய தேவைக்கு வழியின்றி தவித்த இரு குடும்பத்திற்கு புதிய தலைமுறையினருக்கும் நம்பிக்கை நிகழ்வின் மூலமாக உடனடி உதவி கிடைத்தது அக்குடும்பத்தினர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளுக்கு உதவ, கைக்கொடுத்த ஒரு தன்னார்வலரின் சிறு உதவி இது. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்களும் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com