\
ஓபிஎஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை

ஓபிஎஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை

ஓபிஎஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை
Published on

அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி நீடிக்கும் நிலையில், அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்தனர்.

இன்று மதியம் 12 மணிக்கு அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. இரு அணியினரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறப்பட்டது.ஆனால் சசிகலா நீக்கம் குறித்து உறுதியான முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமி அணி தயக்கம் காட்டி வருவதாகக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் தலைமை அலுவலகம் வருவதாக இல்லை என அறிவித்தனர்.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆகிய மூவருடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் ஓபிஸ் மற்றும் முதலமைச்சர் இருவருமே தலைமை அலுவலகம் வரும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com