ஜனநாயகத்தின் மற்றொரு கேலிகூத்து: வீடியோ வெளியிட்ட விஷால்

ஜனநாயகத்தின் மற்றொரு கேலிகூத்து: வீடியோ வெளியிட்ட விஷால்

ஜனநாயகத்தின் மற்றொரு கேலிகூத்து: வீடியோ வெளியிட்ட விஷால்
Published on

ஆர்.கே நகர் தேர்தலில் தன்னை வேட்புமனுவில் முன்மொழிந்தவர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் திடீர் முடிவாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி, வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனுவில் முன்மொழிந்துள்ளவர்கள் 10 பேரில் தீபன், சுமதி என்று இருவரின் கையெழுத்து போலியானது என தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின்னர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இரவு 11 மணி அளவில் மீண்டும் வேட்புமனு நிராகரிப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 

இதையடுத்து விஷால் கடும் கொந்தளிப்படைய அடுத்த தினம் ராஜேஸ் லாக்கானிடம் நேரில் சென்று முறையிட்டார். பின்னர் வேட்புமனுவில் விஷாலை முன்மொழிந்ததால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் தீபன் மற்றும் சுமதி ஆகியோர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி முன் விளக்கமளித்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் வேட்புமனுவில் விஷாலை முன்மொழிந்து தாங்கள் கையொப்பமிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஷால், தன்னை முன்மொழிந்த தீபன், “நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை” என்று கூறுகிறார். அதில் அவர் நான் போட்ட கையெழுத்து என்று ஒப்புக் கொண்டு பின் இல்லை என மறுப்பதாக வார்த்தை பதிவாகியுள்ளது. அதை மேற்கோள் காட்டிவிட்டு இது மற்றொரு ஜனநாயக கேலிகூத்தை வெளிப்படுத்துவதாக விஷால் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com