\
'கேப்டன் கோலியின் அசத்தல் நடனம்' - வைரல் வீடியோ..!

'கேப்டன் கோலியின் அசத்தல் நடனம்' - வைரல் வீடியோ..!

'கேப்டன் கோலியின் அசத்தல் நடனம்' - வைரல் வீடியோ..!
Published on

மைதானத்தில் விராட் கோலி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது

கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமான வீரர் விராட் கோலி. பேட்டிங்கிலும் சரி, கேப்டன்ஷிப்பிலும் சரி தன்னுடைய ஆக்ரோஷத்தை
வெளியிடுவார். ஆனால் அவரைப்போல ஜாலியான ஒருவரையும் பார்க்க முடியாது. பந்துவீச்சாளர்களை இமிடேட் செய்வது, காமெடி
வீடியோக்களை விடுவது என அவ்வப்போது தன்னுடைய ஜாலி முகத்தையும் வெளிக்காட்டுவார். அப்படி ஒரு வீடியோ இணையத்தில்
தற்போது வைரலாகி வருகிறது.

மைதானத்தில் விராட் கோலி ஆடும் நடனம்தான் தற்போது வைரல். பெங்களூரு-பஞ்சாப் இடையேயான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. அப்போது மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது தன்னுடைய நடனத்திறமையை காட்டி அசரவைத்தார் விராட் கோலி.

நடனமா உடற்பயிற்சியா என குழம்பும் அளவுக்கு இரண்டையும் சேர்த்து நடன அசைவுகளை வெளிக்கொண்டு வந்தார் கோலி. அந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு பிடித்த பாடல்களை அந்த வீடியோவுடன் பொருத்தி பலரும் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com