டிரெண்டிங்
”அந்த ஒரு குரல்தான்..” : தன்னை வளர்த்த பாகனை கட்டியணைத்துக் கொண்ட யானை கூட்டம்!
”அந்த ஒரு குரல்தான்..” : தன்னை வளர்த்த பாகனை கட்டியணைத்துக் கொண்ட யானை கூட்டம்!
காட்டு விலங்குகள் என்றாலே காட்டுமிராண்டித் தனமாகத்தான் இருக்கும், மனிதர்களை அச்சுறுத்தும் வகையிலேயே அதன் செயல்பாடுகள் இருக்கும் என்ற பேச்சுகளையெல்லாம் முறியடிக்கும் வகையில் உள்ள ஒரு யானை கூட்டத்தின் செயல்.
இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், தங்களை வளர்த்த முன்னாள் பாகனின் குரலை கேட்டத்தும் 4 யானைகள் திபுதிபுவென பிளிரியபடியே ஓடிவந்து அந்த நபரை கட்டியணைத்து தங்களுடைய அன்பை செலுத்துகின்றன.
இதனை உணர்ந்த அந்த பாகன் தன்னை மறந்து யானைகளைக் கட்டிக்கொள்ளும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. எப்போது தங்களை வளர்த்தவரை ஞாபகத்தில் வைத்திருந்து அவரது குரலை மட்டுமே கேட்டு அப்பழுக்கற்ற அன்பை கொடுத்த யானைகளின் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோரால் ரசிக்கச் செய்திருக்கிறது.