உஸ்..உஸ்ஸென சீறும் கிங் கோப்ராஸ்.. கொஞ்சமும் பயமில்லாமல் வேலை பார்க்கும் பெண்.. வீடியோ!

உஸ்..உஸ்ஸென சீறும் கிங் கோப்ராஸ்.. கொஞ்சமும் பயமில்லாமல் வேலை பார்க்கும் பெண்.. வீடியோ!
உஸ்..உஸ்ஸென சீறும் கிங் கோப்ராஸ்.. கொஞ்சமும் பயமில்லாமல் வேலை பார்க்கும் பெண்.. வீடியோ!

பாம்பு என்றாலே படையே நடுங்கும் போது சாதாரண மனுஷங்க பயப்பட மாட்டாங்களா என்ன என கேட்போரோ ஏராளம். ஆனால் உஸ்..உஸ்ஸ் என கிட்டத்தட்ட 10, 15 கருநாகங்கள் சீறிக்கொண்டிருந்த போதும் அசால்ட்டாக அவை இருக்கும் இடத்தை பெண் ஒருவர் சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

ஊர்வன உயிரினங்களை கண்டால் பொதுவாக யாராக இருந்தாலும் உடலெல்லாம் புல்லரிப்பு ஏற்படும் நிலையில், எள்ளளவும் பயம் இல்லாமல் அந்த பெண் அநாயசமாக பாம்புக் கூட்டம் இருக்கும் கூண்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் வீடியோதான் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சுமார் 45 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், பெண் ஒருவர் சாவகாசமாக முட்டிப்போட்டு கருநாகங்கள் இருக்கும் அந்த கூண்டில் டியூப் மூலம் தண்ணீரை பாய்ச்சி சுத்தம் செய்கிறார். இதுபோக தன்னுடைய கண் கண்ணாடியை கழற்றி சரிசெய்து பின்னர் அணிந்துக்கொண்டு மீண்டும் அந்த கூண்டினை தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்.

அப்போது ஒரு சில பாம்புகள் அவருக்கு பக்கவாட்டில் வந்து சீறும் போது அதன் மீது தண்ணீரை பாய்ச்சுவதையும், ஊர்ந்து சென்ற பாம்புகளை ஏதோ கையில் கடித்த எறும்பை தூக்கி போடுவது போல கையாலேயே தூக்கி மற்றொரு பக்கத்தில் போடவும் செய்கிறார். இதனைக் கண்ட இணையவாசிகள், அதிர்ந்து போனதாக பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com