”போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது” -இந்த வீடியோ உங்களுக்கு அதே Vibe-ஐ கொடுக்கலாம்!

”போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது” -இந்த வீடியோ உங்களுக்கு அதே Vibe-ஐ கொடுக்கலாம்!
”போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது” -இந்த வீடியோ உங்களுக்கு அதே Vibe-ஐ கொடுக்கலாம்!

கையில் மொபைல் ஃபோன் இல்லாதவர்களை இந்த நவீன காலத்தில் காண்பதே பெரும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்கும். அதுவும் அந்த ஃபோனை பாதுகாப்பதற்காக போடப்படும் பேக் கவர் அல்லது பவுச்சில் செல்ஃபோனுடன் கூட கார்டுகள், ரூபாய் நோட்டுகள் என அனைத்தையும் திணித்து வைப்பதையும் காண முடியும்.

அப்படி ஃபோன் பவுச் அல்லது பேக் கவரில் நீங்கள் பொருட்களை திணிப்பவராக இருந்தால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோ உங்களுக்கானதாக கூட இருக்கலாம். அதன்படி பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் பகிர்ந்த வீடியோதான் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

பொதுவாக மொபைல் ஃபோன் கேஸில் பெண்களே பணத்தை, சிம் டூல், கிரெடிட் டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றை வைப்பார்கள் என்பதை கண்டிருப்போம். அதுவும் ஃப்ளிப் கவராக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அதில் இருக்கும் கம்பார்ட்மெண்ட்களுக்கு ஏற்ப தனியாக மணிபர்சே இல்லாமல் எல்லாவற்றையும் அந்த கவரிலேயே திணித்து விடுவார்கள்.

அந்த வகையில்தான் ஸ்விக்கிமார்ட் பகிர்ந்துள்ள வீடியோவும் இருந்திருக்கிறது. அதில், ஃபோன் பேக் கேஸில் காசு, சாக்லேட், கார்டுகள், க்ரீம், லிப் பாம் என எல்லாவற்றையும் வைத்து அதன் மீது மொபைலை வைப்பது போன்று இருக்கிறது. இந்த பதிவின் கேப்ஷனில் “இதுதான் ரியல் லைஃப் டோரிமான் பாக்கெட் போல” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட பலரும் வீடியோவில் செய்ததை ஆமோதித்திருக்கிறார்கள். மேலும், “என் ஃபோன் கவரின் வெட் டிஷ்யூ, பேப்பர் சோப் மற்றும் பணத்தை வைப்பேன்” என பயனர் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com