ஷாக்கிங் வீடியோ: பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. திக் திக் நிமிடங்கள்!

ஷாக்கிங் வீடியோ: பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. திக் திக் நிமிடங்கள்!
ஷாக்கிங் வீடியோ: பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. திக் திக் நிமிடங்கள்!

விநோதமான, சுவாரஸ்யமான, அதிர்ச்சியூட்டுகிற, முகம் சுழிக்க செய்கிற பல வீடியோக்கள் சமூக வலைதளங்கள் நித்தமும் காணக் கிடைக்கிறது. அந்த வகையில் பெண் ஒருவரின் காதில் சிறிய பாம்பு ஒன்று புகுந்திருந்த சம்பவம் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு காண்போரை கதிகலங்கச் செய்திருக்கிறது.

பொதுவாக காதில் எறும்போ, அல்லது தண்ணீர் இருந்தாலேயே தலையே வெடித்துவிடும் போன்ற உணர்வு இருக்கும், ஆனால் பாம்பு ஒன்று புகுந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியே பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், பெண்ணின் காதில் மஞ்சள் நிற பாம்பு ஒரு தலையை தூக்கிய படி இருந்திருக்கிறது. இதன் மூலம் பாம்பின் தலை நீங்கலாக உடல் முழுவதும் சிறுமியின் காதுக்குள் இருந்திருக்கிறது.

இதனால் கடுமையாக வலியால் துடித்த அந்த பெண்ணை தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு பெண்ணின் காதுக்குள் இருக்கும் அந்த பாம்பை வெளியே எடுக்க மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்திருக்கிறார்கள். பாம்பு காதுக்குள் நெளியாமல் இருக்கும் வகையில் சிறிய கருவிகளை கொண்டு அதனை கவனமாக வெளியேற்ற முற்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு ஓடும் அந்த வீடியோவின் இறுதி வரையில் பெண்ணின் காதில் இருந்து பாம்பு எடுக்கப்பட்டதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. இதுபோக எப்படி பெண்ணின் காதுக்குள் பாம்பு நுழைந்தது என்றும், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்றும் இதுகாறும் தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com