டிரெண்டிங்
‘திரும்ப வந்துட்டேன்’ உணவு தேடி ஊருக்குள் உலாவரும் படையப்பா காட்டு யானை! #ViralVideo
மூணாறு அருகே மீண்டும் உலாவந்த படையப்பா யானை, உணவு தேடிவிட்டு அமைதியாக வனப் பகுதிக்குள் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறில் மிகவும் பிரசித்தி பெற்றது படையப்பா காட்டு யானை. சின்ன கனால் பகுதியில் இருந்து அரிசிக் கொம்பன் காட்டு யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட பின், இந்த படையப்பா காட்டு யானை மூணாறு பகுதியில் தென்படாமல் இருந்தது.
இந்நிலையில், மீண்டும் இரவு நேரங்களில் படையப்பா காட்டு யானை மூணாறு பகுதிகளில் நடமாடத் தொடங்கியுள்ளது. அதன்படி மூணாறு அருகே சட்ட மூணாறு பகுதியில் இரவில் உலாவந்த படையப்பா யானை, உணவு தேடிவிட்டு வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.