ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளங்களை மக்கள் கடக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேதான் இருக்கிறது. ரயில் வரும் பாதையை கடந்தால் உயிருக்கு சேதம் வரும் என்பதை புரிந்து கொண்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் முடிவிலியாகவே இருக்கின்றன.
அந்த வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் சிக்கியவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த சம்பவம் குறித்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதனபடி, உத்தர பிரதேசத்தின் இடாவாவில் உள்ள பரத்தானா ரயில் நிலையத்தை இண்டெர்சிட்டி ரயில் ஒரு கடந்திருக்கிறது. அப்போது நடைமேடையில் இருந்தவர் டிராக்கை கடப்பதற்காக இறங்கிய போது திடீரென விரைவு ரயில் வந்திருக்கிறது.
உடனே பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கும் இடையே இருந்த இடத்தில் படுத்திருக்கிறார். இண்டெர்சிட்டி ரயில் முழுவதுமாக கடந்த பிறகு தண்டவாளத்திற்கு இடையே படுத்திருந்த அந்த நபர் சாவகாசமாக எழுந்து நின்று அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
நல்வாய்ப்பாக அந்த நபருக்கு எந்த காயமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் பலரும் பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோதான் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.