க்யூட் ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக மாறிய குட்டி யானை! #ViralVideo

ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக மாறிய காட்டு யானை! ரொம்ப பயங்கரமான யானையா இருக்குமோ...?

ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருக்கையில் காட்டிலிருந்து வந்த குட்டி யானை ஒன்று, “யேய் நிப்பாட்டுப்பா வண்டியை...” என்ற மோடில் பேருந்தை நிறுத்தி வைத்துள்ளது.

அத்துடன் “என்னப்பா டிரைவர், லைசன்ஸ் வச்சிருக்கியா? டயருக்கெல்லாம் காத்து ஒழுங்கா அடிச்சிருக்கியா?” என்பது போல தனது காலால் பஸ் டயரை எட்டி உதைத்து பரிசோதனை செய்திருக்கிறது.

பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை, ஒருகட்டத்தில் “சரி சரி.. போலாம் ரைட்” என்று சொல்வதுபோல நகர்ந்து சென்றுள்ளது. இதை பேருந்தில் பயணம் செய்த பயணியொருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போழுது வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com