லவ்வருடன் ஹாயாக ஸ்கூட்டியில் போன மனைவி.. கையும் களவுமாக பிடித்த கணவன்!
திருமணத்தை மீறிய உறவுகள் தொடர்பாக பல சம்பவங்கள், செய்திகள் நாள்தோறும் அம்பலமாகி வருகிறது. அதில் சில வேடிக்கையாகவும், சில முகம் சுழிப்பாகவும் இருக்கச் செய்யும்.
இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தை அடுத்த ஆக்ராவில் நடு ரோட்டில் தன்னுடைய மனைவியையும் அவரது காதலனையும் கையும் களவுமாக கணவன் ஒருவர் பிடித்திருக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.
அதன்படி, திருமணமாகி பத்தாண்டுகளாகியிருக்கும் அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் அண்மைக்காலமாக சம்பந்தபட்ட தம்பதியிடையே தொடர்ந்து சண்டைச் சச்சரவாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இருவருக்கும் இடையே சண்டை வந்திருக்கிறது.
அப்போதுதான் தன்னுடைய மனைவிக்கு தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதை அந்த கணவனுக்கு தெரிய வந்திருக்கிறது. அதனையடுத்து கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஞாயிறன்று வாய் வார்த்தையாக தொடங்கிய இருவருக்குமான தகராறு நடந்திருக்கிறது. இதனால் அந்த பெண் கணவன் மற்றும் குழந்தையிடம் எதையும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.
மனைவி வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியுற்றுப்போன கணவரும் குழந்தையும் அந்த பெண்ணை தேடிச் சென்றிருக்கிறார்கள். அப்போது ஆக்ரா அருகே டூவீலரில் அந்த பெண் தனது காதலனுடன் ஊரை வீட்டு வெளியேற முயற்சித்திருக்கிறார். நடு ரோட்டில் மனைவியை இன்னொரு நபருடன் கண்ட அந்த நபர் அவர்களை மடக்கி பிடிக்க வண்டியை வேகமாக முறுக்கி முந்திச் சென்றிருக்கிறார்.
ஒருகட்டத்தில் அந்த பெண்ணும் அவரது காதலரும் வண்டியை பிளாட்பாரம் அருகேயே போட்டுவிட்டு தப்பியோட, பின்னாலேயே துரத்திச் சென்ற அந்த கணவர் மனைவியின் காதலரை பளார் பளார் என அடித்து துவம்சம் செய்திருக்கிறார். இது அந்த பகுதியில் பரபரப்பை கிளப்பவே போலீசார் இடைமறித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக அபராதம் விதித்திருக்கிறார்கள். ஆனால் அந்த பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.