”மன்னிச்சுருங்க.. பெண்களுக்கு தடை” - ஆட்டோ வாசகத்தால் ஷாக்கான நெட்டிசன்ஸ்.. பின்னணி!

”மன்னிச்சுருங்க.. பெண்களுக்கு தடை” - ஆட்டோ வாசகத்தால் ஷாக்கான நெட்டிசன்ஸ்.. பின்னணி!
”மன்னிச்சுருங்க.. பெண்களுக்கு தடை” - ஆட்டோ வாசகத்தால் ஷாக்கான நெட்டிசன்ஸ்.. பின்னணி!

ஆட்டோக்களில் எழுதப்படும் வசனங்களுக்கு எப்போதுமே ஒரு தனி கவனம் இருக்கும். வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள், அனுபவங்களை சுருக்கமாக ஆட்டோக்களின் பின்புறம் எழுதினால் பெருமளவு பேசப்படும்.

“ஆட்டோ பின்னாடியே எழுதலாமே” என படம் ஒன்றில் நடிகர் விவேக் சொல்வது போல, சில நகைச்சுவையான நிகழ்வுகளை கூட அடடே போட வைக்கும் வகையில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் எழுதுவது வாடிக்கையாகவே இருக்கும்.

அந்த வகையில் பெண்களிடம் மன்னிப்பு கேட்டு ஆட்டோ பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் குறித்த போட்டோ ஒன்றுதான் ட்விட்டரில் நெட்டிசன்களிடையே படு வைரலாகி வருகிறது.

அதில், “பெண்களே மன்னிச்சுருங்க. என் மனைவி ரொம்ப கடுமையானவர்” எனக் குறிப்பிட்டு பெண்களுக்கு தடை எனக் குறிக்கும் ஸ்டிக்கரையும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பான ஃபோட்டோவை வன்ஷிகா கார்க் என்ற பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விசுவாசத்தின் உச்சம்” என கேப்ஷனிட்டிருக்கிறார்.

இந்த பதிவு இணையவாசிகளிடையே வைரலாக எக்கச்சக்கமானோர் அந்த ஆட்டோ ஓட்டுநரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள். சிலர் கிண்டலாகவும், நக்கலாகவும் கமென்ட் செய்திருக்கிறார்கள்.

அதில், “பந்தயமே கட்டுகிறேன். இதனை கண்டிப்பாக அவரின் மனைவிதான் எழுதியிருப்பார்” என்றும், “அய்யோ.. அப்போ பெண்களெல்லாம் என்ன செய்வார்கள்?” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் சிலர், இதேப்போன்ற வாசகத்தை டுவீலரிலும், காரிலும் பார்த்ததாக குறிப்பிட்டு ஃபோட்டோவோடும் பகிர்ந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com