டிரெண்டிங்
விழுப்புரம்: முட்புதரில் கிடந்த ஆண் சடலம்... கொலையா? தற்கொலையா?
விழுப்புரம்: முட்புதரில் கிடந்த ஆண் சடலம்... கொலையா? தற்கொலையா?
விழுப்புரம் : திண்டிவனத்தில் 30வயது மதிக்க தக்க ஆண் சடலம் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ரோசனை பாட்டை பகுதியில் உள்ள முட்புதரில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் பார்த்து ரோசனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு மாங்குடி பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.