கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் - இன்று டிஸ்சார்ஜ்

கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் - இன்று டிஸ்சார்ஜ்
கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் - இன்று டிஸ்சார்ஜ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனை தொடர்ந்து அடுத்த சில தினங்களில் அவரது மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனாத் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரும் விஜயகாந்துடன் இணைந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இருவரும் மருத்துவக்கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com