சிவகாசியில் விஜயகாந்தை நோக்கி கல்வீச்சு

சிவகாசியில் விஜயகாந்தை நோக்கி கல்வீச்சு
சிவகாசியில் விஜயகாந்தை நோக்கி கல்வீச்சு

சிவகாசியில் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசியில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா மற்றும் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையை நோக்கி சிலர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து விமர்சித்தார். இந்நேரத்தில் மேடையை நோக்கி  ஒரு செங்கல் வந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கல் வீசியது யார் என்பது குறித்து காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com