பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்காததற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக வழங்காமல் தமிழக அரசு ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக அரசு சரியான நேரத்தில் ஊதிய உயர்வை வழங்காத காரணத்தால் பல குடும்பங்கள் சிரமத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை தமிழக அரசு, உடனே வழங்கவேண்டும் என்றும், ஆசிரியர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்காதது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் கூறியுள்ளார்.