மீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்

மீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்
மீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் சுடப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது இந்திய கடலோர காவல் படையினரால் சுடப்பட்டதாக வந்த செய்தி அனைவரையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய கடலோர காவல் படையினரே நமது மீனவர்களை சுட்டது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இலங்கை கடலோர காவல் படையினரால் ஏற்கனவே மீனவர்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து வரும் நிலையில் மீனவ மக்களை, காக்கவேண்டியது இந்திய அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதற்கு காரணமாக கடலோர காவல் படையினர் மீது வழக்கு பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்யவேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, மனிதனை கடித்த பழமொழி போலவும், வேளியே பயிரை மேய்ந்தது போலவும் இந்த நிகழ்வு உள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com