தனித்து களம் காணும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம்: நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு

தனித்து களம் காணும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம்: நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு

தனித்து களம் காணும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம்: நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு
Published on

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை; வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், விஜயின் உத்தரவுடன் எந்த கட்சியின் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை வெற்றியடைய செய்ய மாவட்ட நிர்வாகிகளும், ரசிகர்களும் முழுவீச்சில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com